கருங்குளம் வட்டாரம் கீழசெக்காரக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட சொக்கலிங்கபுரத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி நடைபெற்றது, துணை இயக்குனர் கிருஷ்ணலீலா உத்தரவின்பேரில் வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரி முன்னிலையில் மருத்துவ அலுவலர் அஸ்வினி ஜெனிபர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பெரியசாமி மேற்பார்வையில் 1.கொசு ஒழிப்பு புகை அடித்தல், 2.வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரை அப்புறப்படுத்துதல், மக்களிடையே டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு ஆகியன நடைபெற்றது,நடமாடும் மருத்துவ குழு மருத்துவர் பிலிப் தலைமையில் மருத்துவ முகாம் நடைபெற்றது சித்த மருத்துவர் சுப்பையா பாண்டி நிலவேம்பு குடிநீர் வழங்கினார், சுகாதார ஆய்வாளர் முத்துக்குமார், மற்றும் பணியாளர்கள் கள பணியாற்றினார்கள்.


