கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் ஆழிகுடியில் சுகாதார வளாகம் கட்ட அடிக்கல் நாட்டப்படடது.
கருங்குளம் ஒன்றிய சேர்மன் மதிப்பிற்குரிய கோமதி ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஒன்றிய ஆணையாளர் செல்வி , வட்டார வளர்ச்சி அலுவலர் பாக்கிய லீலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதன் பின் சுகாதார வாளகம் கட்டுதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 10வது வார்டு கவுன்சிலர் சுடலை முத்து, ஊராட்சி மன்ற தலைவர் முருகேஸ்வரி , ஊராட்சி செயலர் முத்து, சமூக சேவகர் தினேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


