கொங்கராயகுறிச்சி மிகவும் பழமையான ஊராகும். இந்த ஊரில் 1869 ல் ஆற்று வெள்ளத்தில் முழுவதும் அழிந்து விட்டது. அதன் பின் ரேணியஸ் அய்யர் என்ற கிறிஸ்தவ பாதிரியார் 1870 அன்று மீண்டும் குடியிருப்பை உருவாக்கினார். அந்த குடியிருப்பில் தூயதிருத்துவ ஆலயம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதன் பின் படிப்படியாக ஆலயம் திருத்தப்பட்டு தற்போது வானுயர்ந்த கோபுரத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது. 150 ஆண்டு பழமையானது இந்த ஆலயமாகும். சிஎஸ்ஐ தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்திற்கு உட்பட்ட கொங்கராயகுறிச்சி சேகர தூய திரித்துவ ஆலயத்தில் நடைபெற்ற ஆலய பிரதிஷ்டை, கோபுர பிரதிஷ்டை அசன பண்டிகை ஆகிய முப்பெரும் விழாவிற்கு சேகர தலைவர் யோசுவா அருள்ராஜ் தலைமை வகித்தார். சபை ஊழியர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். சேகரகுரு இமானுவேல் அற்புத குமார் பிரதிஷ்டை பண்டிகையை ஜெபம் செய்து துவககி வைத்தார்.மாலை 5 மணிக்கு அசனம் நடந்தது. இதில் .ஏராளமானவர் கலந்து கொண்டனர்.


