பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு செய்துங்கநல்லூர் எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாபர் மசூதி இடிப்பை கண்டித்தும், பாபர் மசூதி நிலத்தை முஸ்லீம்களிடம் திருப்பிக்கொடுக்க வலியுறுத்தியும், பாபர் மசூதி இடித்த குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க கோரியும், வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991ஐ நடைமுறைப்படுத்தக்கோரியும் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
எஸ்.டி.பி.ஐ கட்சி ஸ்ரீவைகுண்டம் இணைச்செயலாளர் உமர்ஜமான் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினனார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ கட்சி மாநில பேச்சாளர் சாகுல் ஹமீது உஸ்மானி, தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் முஹம்மது உமர், பாப்புலர் ப்ரண்ட் மாவட்ட தலைவர் அப்துல்காதர் ஆகியோர் கண்டன உரை ஆற்றினார்கள்.


