விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து செய்துங்கநல்லூர் மெயின் பஜாரில் சாலை மறியலில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்,
மார்க்ஸிஸட் கட்சியின் சார்பாக விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவாகவும் விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும்
தொடர் போராட்டம் நடைபெறுகிறது, அதன் ஒருபகுதியாக கருங்குளம் ஒன்றியத்தில் செய்துங்க நல்லூரில் திருநெல்வேலி டு திருச்செந்தூர் மெயின் ரோட்டில் அண்ணாசிலை அருகில் பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர் . திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் மார்க்சிஸ்ட் கட்சியினர் 50க்கும் மேற்பட்டோரை டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையிலான செய்துங்கநல்லூர் போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்,
இந்த போராட்டத்திற்க்கு ஒன்றியசெயலாளர் ராமசந்திரன், தலைமைதாங்கினார். மறியலை விளக்கி மாரியப்பன் பேசினார்.மறியலுக்கு மணி முன்னிலை வகித்தார்.ஒன்றியகுழு உறுப்பினர்கள் பெருமாள். கண்ணன். கொம்பையா பாக்கியராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்,


