செய்துங்கநல்லூரில் அ.ம.மு.க சார்பில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிககப்பட்டது.
செய்துங்கநல்லூர் பஜாரில் ஜெயலலிதா நினைவு தினத்தினையட்டி கருங்குளம் ஒன்றிய அமமுகவினர் அவர் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய துணை செயலாளர் முத்தையா தலைமை வகித்தார். திருவரங்கம் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் கொம்பையா, கே.எஸ். முருகன், எண்ணாயிரத்தான், பேச்சிமுத்து, சுடலை முத்து, சுடலை, அய்யப்பன், பிச்சக்கண்ணு, இசக்கி முத்து, மாயாண்டி, காரசேரி மணி, குருநாதன், இசக்கி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


