கருங்குளம் ஒன்றிய பகுதியில் சண்முகநாதன் எம்.எல்.ஏ சுற்று பயணம் செய்தார்.
கருங்குளம் பஞ்சாயத்து புளியங்குளத்தில் 8.50 லட்சம் செலவில் கட்டப்பட்ட அங்கன் வாடி கட்டிடத்தினை திறந்து வைத்தார். அதன் பின் ஆறாம்பண்ணையில் 16 லட்சம் செலவில் கட்டப்படவுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு அடிக்கல் நாட்டினார். அதன் பின் கருங்குளத்தில் நம்பிக்கையின் பாலம் தொண்டு நிறுவனத்தில் உள்ள மாணவர்கள் 100 பேருக்கும் கருங்குளம் கனகராஜ் சார்பில் கொடுக்கப்பட்ட இலவச அரிசியை எம்.எல்.ஏ சண்முகநாதன் வழங்கினார்.
கிளாக்குளத்தில் 14 லட்சம் செலவில் புதிய மேல்நி¬ ல நீர்த்தேக்க தொட்டி கட்ட அடிக்கல் நாட்டினார். அவ்வூரில் தெற்கு தெருவில் 8,50 லட்சம் செலவில் கடடப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தினை திறந்து வைத்தார். அதன் பின் சேரகுளம் மேல சிரியத்தூரில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு குடிதண்ணீர் இணைப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கருங்குளம் ஒன்றிய சேர்மன் கோமதி ராஜேந்திரன், ஆணையாளர் சுப்புலெட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கிடாசலம், பொறியாளர்கள் சித்திரைசேகர், மேரி, மாவட்ட கவுன்சிலர் பேச்சியம்மாள், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல், கருங்குளம் ஒன்றிய அதிமுக செயலாளர் செங்கான், அய்யாத்துரை பாண்டியன், சுப்பையா பாண்டியன், முருகையாபாண்டியன், பஞ்சாயத்து தலைவர் ஆறாம்பண்ணை சேக் அப்துல் காதர், கருங்குளம் சங்கர், தெற்கு காரசேரி பேபி, சேரகுளம் செந்தில் நாயகி, அதிமுக கட்சியை சேர்ந்த அய்யப்பன், கதிரேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


