செய்துங்கநல்லூரில் எஸ்.என்.பட்டியில் கண்காணிப்பு கேமரா திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து எஸ்.என்.பட்டி மிகச்சிறிய கிராமமாகும். இந்த கிராமத்தில் 100 வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊரில் செய்துங்கநல்லூர் போலீஸ் நிலையம் சார்பாக பொதுமககள் &போலீஸ் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பேசிய இன்ஸ்பெக்டர் ராஜசுந்தர், பெரும்பாலுமே குற்றங்கள் குறைய ஊருக்கு ஊர் கண்காணிப்பு கேமரா அமைவது அவசியமாகிறது. இந்த ஊரை பொறுத்தவரை, ஊருக்கு நுழையும் வாயில் மற்றும், ஊரை சுற்றி உள்ள முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராபொறுத்தவேண்டும். ஊரில் உள்ள பெண்களுக்கு எந்த பிரச்சனை என்றாலும் உடனடியாக போலிசில் தொடர்பு கொள்ளலாம். செல்போனை படிப்பு வகைக்கும் மட்டும் பயன்படுத்த வேண்டும். மற்றபடி குற்றம் சம்பந்தட்ட நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்று அவர் பேசினார்.
அதன் பின் ஊர் பொதுமக்கள் மூலமாக எஸ்.என்.பட்டியில் கண்காணிப்பு கேமரா பொறுத்துவது என முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் வடகரையான், ஜெயராமன், சங்கர், சுடலை மணி, இராமசந்திரன், தங்கதுரை, எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, பார்வதி, தர்மகண், சின்னதுரை, உள்பட பலர் கலந்துகொண்டனர்.