ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவின் போது மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றியதற்காக மாநில விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன
இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரும்பணியாற்றியதற்க்காக 2020-ஆம் ஆண்டுக்கான சிறந்த மாவட்ட ஆட்சித்தலைவர் விருதை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது
2020-ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவின் போது தமிழக அரசின்
மாநில விருதுகள் வழங்குவதற்கென, மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்த நபர்கள் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களிலிருந்து தகுதி வாய்ந்த நபர்கள் மற்றும் நிறுவனங்களை தேர்வு செய்யும் பொருட்டு 17.07.2020 அன்று தேர்வுக் குழுவின் கூட்டம், மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் செயலாளர் அவர்கள் தலைமையில்
நடைபெற்றது.
விருதுகளுக்கென பெறப்பட்ட விண்ணப்பங்களை தேர்வுக் குழு
உறுப்பினர்கள் ஆய்வு செய்து வழங்கிய ஆலோசனைப்படி, 2020 ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றியதற்காக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரிக்கு மாநில விருதுகள் வழங்கப்பட்டுள்ளது
இவ்விருதினை சுதந்திர தினவிழாவின் போது வழங்கலாம் என முடிவு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.


