கருங்குளத்தில் அனுமதியின்றி மதுபாட்டில் விற்பனை.
செய்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 5 ந்தேதி ஞாயிற்றுக் கிழமை நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமுலிலிருந்தது. இந்த வேளையில் மதுக் கடை அடைக்கப்பட்டிருந்தது.
செய்துங்கநல்லூர் உதவி காவல் ஆய்வாளர் சிலுவை அந்தோணி தலைமையில், பயிற்சி உதவி ஆய்வாளர் தேவி மற்றும் காவலர் மகராசி ஆகியோர் செய்துங்கநல்லூர் காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கருங்குளம் சுடலை கோவில் அருகே 2 பெண்கள் இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்தனர்.
அவர்களை போலிசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் அனுமதியின்றி மதுபாட்டில்களை விற்பனை செய்ததைக் கண்டுபிடித்தனர்.
மது விற்பனை செய்த கருங்குளத்தைச் சேர்ந்த வள்ளி, இசக்கித்தாய் ஆகியோரை செய்துங்கநல்லூர் போலிசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 13 மதுபாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை போலிசார் பறிமுதல் செய்தனர்.


