தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்குத் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி வழங்கி பாராட்டினார். அதில் செய்துங்கநல்லூர் சப் இன்ஸபெக்டர் சிலுவை அந்தோணி உள்பட போலிசார் கலந்துகொண்டனர்.
கடந்த 02.07.2020 அன்று இரவு ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவகளையில் முத்துப்பேச்சி மற்றும் அருண் மகேஷ் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சம்பவம் நடந்த 8 மணி நேரத்தில் குற்றவாளிகளான முத்துராமலிங்கம் என்ற ராஜா முத்துச்சுடர் மற்றும் அருணாச்சலம் ஆகியோரை கைதுசெய்யப்பட்டனர். இதற்காகப் புலன் விசாரணை அதிகாரிக்கு உதவிய ஸ்ரீ வைகுண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகப் பெருமான், செய்துங்கநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிலுவை அந்தோணி, தலைமைக் காவலர்கள் லட்சுமணன், ஜேக்கப் தங்க மோகன், காவலர் நாராயணசாமி, சாயர்புரம் காவல் நிலைய தலைமைக் காவலர் பூர்ண ராஜ், செய்துங்கநல்லூர் காவல் நிலைய முதல் நிலை காவலர் வேம்பு ராஜ், ஆனந்தராஜ், காவலர் செல்வகுமார் , ஆழ்வார்திருநகரி காவல் நிலைய காவலர் சுப்பிரமணி ஆகியோரை பாராட்டி வெகுமதி வழங்கினார்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் களப்பணி ஆற்றிய ஆதரவற்றவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டு சாலையோரம் சுற்றித் திரிந்தவர்களுக்குக் கனிவுடன் உணவு பொட்டலங்கள் வழங்கியும், அவர்களுக்கு முக கவசம் வழங்கியும், தேவையான உதவிகளைச் செய்து பொதுமக்களிடம் பாராட்டைப் பெற்று அனைவராலும் பேசப்பட்ட முத்தையா புரம் தலைமைக் காவலரின் செயல் மிகவும் மெச்சத்தகுந்த பணியாகும் ஆகவே அவரை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டி வெகுமதி வழங்கினார்.
—-


