கருங்குளத்தில் வாழையில் தீடீரென தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கருங்குளம் தாமிரபரணி ஆற்றங்கரையில் சுமார் ஆயிரம் ஏக்கர் பாசன பரப்பில் வாழை பயிரிடப்பட்டுள்ளது. தற்போது குளத்தில் தண்ணீர் இல்லாத காரணத்தினால் விவசாயிகள் போர் தண்ணீர் மூலமாக வயல்வெளிகளுக்கு தண்ணீர் பாய்த்து வருகின்றனர். இதற்கிடையில் கடும் வெயில் காரணமாகவும், காட்டு பன்றிகள் கட்டுபாடு இன்றி வாழைகளை அழித்து வருவதாலும் விவசாயிகள் வேதனை அடைந்து வந்தனர். இதற்கிடையில் நேற்று மாலை 4 மணி அளவில் தாமிரபரணி ஆற்றங்கரையை யட்டி உள்ள காட்டு பகுதியில் தீடீரென தீ பற்றியது. இந்த தீ அங்கிருந்து நகர்ந்து வாழைகாட்டுக்குள் நுழைந்தது. இதனால் கணேசன்,வெங்கடாசலம் ஆகியோரின் வாழைகள் தீபற்றி எரிந்தது.
இதற்குள் அக்கம்பக்கத்தில் இருந்து வந்த விவசாயிகள் தாமிரபரணி ஆற்றில் இருந்தும், போர் தண்ணீரை எடுத்தும் தீயை அணைத்தனர். இதனால் சுமார் 200க்கு மேற்பட்ட வாழைகள் கருகின. சரியான நேரத்தில் விவசாயிகள் கவனித்த காரணத்தினால் லட்சகணக்கான வாழைககள் தப்பின.


