முறப்பநாடு படுகையூரில் கொரானா நிவாரண நிதி வழங்கப்பட்டது.
1974 ல் பாளையங்கோட்டை கதிட்ரல் மேல்நிலைப்பள்ளி படித்த மாணவர்கள் ஒன்று சேர்ந்து நெல்லை நண்பர் குழு என நடத்தி வருகிறார்கள். இதில் வங்கி பணியாளர் ராஜன், இன்சூரன்ஸ் அதிகாரி ஆறுமுக நயினார், அமெரிக்க பொறியாளர் கனகராஜ் தேசிய தொழில்நுட்ப அலுவலர் முத்துகிருஷ்ணன்,சத்துணவு ஊழியர் சங்க செயலாளர் காசி மணி உள்பட பலர் உள்ளனர். இவர்கள் நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நலிவடைந்தோருக்கு கொரானா சிறப்பு நிவாரண நிதியாக குடும்பத்துக்கு தலா 1000 ரூபாய் வழங்கி வருகிறார்கள்.
இதில் முறப்பநாடு படுகையூரில் சத்துணவு ஊழியர் சங்க செயலாளர் காசி மணி தலைமையில் நிவாரண நிதி வழங்கப்பட்டது. இதில் சுமார் 25க்கு மேற்பட்ட குடும்பத்துக்கு தலா ஆயிரம் வழங்கப்பட்டது.இது போலவே நெல்லை மாவட்டம் ராஜ புதுககுடியிலும் கொரானா நிவாரண நிதியாக தலா ஆயிரம் வழங்கப்பட்டது.


