கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் இந்த சமயத்தில், தினசரி வேலைக்கு சென்று குடும்பத்தை கவனிப்பவர்களின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நேரத்தில் பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் தன்னால் இயன்ற உதவிகளை பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு தன் சொந்த செலவிலும், தன்னார்வலர்கள் மூலமும் நிவாரண பொருட்களை திரட்டி வழங்கி வருகிறார் சார்பு ஆய்வாளர் வேல்ராஜ்.
கொரோனா தொற்றுநோயால் மே 3 ஆம்தேதி வரை மத்திய அரசால் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்ட நேரத்தில், வசவப்பபுரம், வல்லநாடு, செந்நெல்பட்டி, பொட்டல்குளம்,கீழப்புத்தனேரி,மேலபுத்தனேரி, பாறைக்குளம், ஆகிய கிராமத்திலுள்ள ஏழை எளிய நலிவடைந்த மக்களுக்கு 50க்கும் மேற்பட்ட, அரிசி மளிகைப் பொருள், காய்கறி,சோப்பு,முகவச்சம் ஆகியவற்றை, முறப்பநாடு காவல்துறை ஆய்வாளர்,பார்த்திபன் தலைமையில், குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சார்பு ஆய்வாளர்_வேல்ராஜ் முன்னிலையில், வழங்கினார்கள்.
இந்தநிகழ்வில் பசுமை தமிழ் தலைமுறை நிறுவன தலைவர், வி.சுகன் கிறிஸ்டோபர்,பூல்பாண்டி, வி.கணேசன், நாகராஜன், வி.அரியமுத்து, பரமசிவம், சாமிகணேஷ்,வேல்முருகன்,வேம்புராஜ், ரி.இசக்கி உள்பட பசுமைதமிழ்தலைமுறை அமைப்பை சார்ந்த பலர் கலந்து கொண்டார்கள்.


