
கருங்குளத்தில் திமுக சார்பில் கொரோனா விழிப்புணர்வு நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் – திருவைகுண்டம் வட்டம் – கருங்குளம் ஊராட்சி – கருங்குளம் மத்திய திராவிட முன்னேற்றக் கிளைக் கழகத்திற்குட்பட்ட பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், தெருக்களில் ஓடக்கூடிய சாக்கடை நீரில் பிளீச்சிங் பவுடர் தூவியும், சாக்கடைக் கழிவு நீர்கள் தெருக்களில் ஓடாத வண்ணம் வீட்டுக்கு வீடு உறிஞ்சுக் குழாய் அமைப்பது குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில் கருங்குளம் திமுக மத்தியக் கிளைச் செயலாளர்.ஜாபர் சாதிக், திமுக கிளைப் பொருளாளர் சு.பரமசிவன், திமுக கிளை அவைத் தலைவர் ச.உடையார், திமுக ஒன்றியப் பிரதிநிதி ச.சிவா, செயற்குழு உறுப்பினர்கள் மூ.சங்கர், உ.இ.பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.