செய்துங்கநல்லூரில் மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஆவுடையப்பன் தலைமை வகித்தார். மதுவிலக்கு தனி வட்டாட்சியர் லிங்கராஜ் முன்னிலை வகித்தார். ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் சந்திரன் பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
மண்டல துணை வட்டாட்சியர் சங்கரநாராயணன், வருவாய் ஆய்வாளர் இருதய மேரி, முதுநிலை வருவாய் ஆய்வாளர் அய்யனார், பாலிடெக்னிக் அலுவலக கண்காணிப்பாளர் கணேசன், செய்துங்கநல்லூர் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஆறுமுகசேகர், ஆசிரியர்கள் சாகுல் பாட்ஷா, சுப்பிரமணியன், வைத்திமாநிதி, ராம்பிரபு மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் டாக்டர் ஸ்டீபன் தலைமையில் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர்.


