தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரில் அனைத்து சுற்றுவட்டார ஜமாத் இயக்கம் மற்றும் கட்சி கூட்டமைப்பு சார்பாக என்.ஆர்.சி. சி.ஏ.ஏ., என்.பி.ஆர் சட்டங்களை எதிர்த்து கடந்த 26.02.2019 முதல் ஷாஹின்பாக் தொடர் முழக்க போராட்டம் நடந்து வருகிறது.
6ம் நாளான இன்று தொடர் முழக்க போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் சமூக சேவகர் அபுதாஹீர் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார். இந்த போராட்டத்தில் மத்திய மாநில அரசுக்கு எதிராக குடியுரிமைச்சட்டத்தை எதிர்த்தும், திரும்ப பெற வலியுறுத்தியும், கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் இந்தச்சட்டத்தை திரும்ப பெறும் வரை தொடர் போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


