செய்துங்கநல்லூரில் அனைத்து சுற்றுவட்டார ஜமாத் இயக்கம் மற்றும் கட்சி கூட்டமைப்பு சார்பாக என்.ஆர்.சி. சி.ஏ.ஏ., என்.பி.ஆர் சட்டங்களை எதிர்த்து கடந்த 26.02.2019 முதல் தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூரில் ஷாஹின்பாக் தொடர் முழக்க போராட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில் ஐந்தாவது நாளான நேற்று நடைபெற்ற தொடர் முழக்க போராட்டத்தில் பெண்கள் குழந்தைகள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் மத்திய மாநில அரசுக்கு எதிராக குடியுரிமைச்சட்டத்தை எதிர்த்தும், திரும்ப பெற வலியுறுத்தியும், கோஷங்கள் எழுப்பப்பட்டது.
மேலும் இந்தச்சட்டத்தை திரும்ப பெறும் வரை தொடர் போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இதற்கிடையில் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக 82 பேர் மீது போலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்டத் தலைவர் அப்துல்காதர் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 40 பெண்கள் உள்பட 82 பேர் மீது செய்துங்கநல்லூர் போலிசார் 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். செய்துங்கநல்லூர் கிராம நிர்வாக அதிகாரி சந்தனகுமார் கொடுத்த புகாரின் பேரில் போலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


