செய்துங்கநல்லூர் மெயின் பஜாரில் நடந்த இந்தபோராட்டத்தில் மாவட்ட மருத்துவ அணி செயலாளர் ரசீத் காமில் முன்னிலை வகித்தார். மாவட்ட பேச்சாளர் அக்தார் அய்யூப், அபூபக்கர் சித்திக், அப்ரிதி , நவாஸ் ஆகியோர் பேசினர். இதேபோல் ஸ்ரீவைகுண்டம் , உடன்குடி, ஏரல், காயல்பட்டனம், தூத்துக்குடி ஆகிய இடங்களிலும் தர்ணா போரட்டம் நடந்தது. செய்துங்கநல்லூர் 600 பெண்கள் உள்பட 1000 பேர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆறாம்பண்ணை, செய்துங்கநல்லூர் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தினர் செய்திருந்தனர்.


