செய்துங்கநல்லூரில் கண்காணிப்பு கமரா திறப்பு விழா நடந்தது. செய்துங்கநல்லூரில்ஆசை வெண்ணிலா குழு சார்பில் கண்காணிப்பு கமரா திறப்பு விழா நடந்தது. பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன் தலைமை வகித்தார் . விவசாய சங்க தலைவர் குமார், சுடலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராமகிருஷ்ணன் வரவேற்று பேசினார். கேமராவை சப் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் துவக்கி வைத்து பேசினார். அதன் பின் ஆபரேட்டர் அறையை பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதனும், கம்யூட்டரை விவசாய சங்க தலைவர் குமாரும் துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, ஓய்வு பெற்ற காவலர் சுப்பிரமணி, ஓய்வு பெற்ற நடத்துனர் திருவரங்கம், ஓய்வு பெற்ற தாலூகா அலுவலர் ஆறுமுகம், ஜனதா தள தொழிற்சங்க பொதுச்செயலாளர் முத்துகிருஷ்ணன், சுவீட் கணேசன், பொறியாளர் முருகேசன், முன்னாள் வார்டு உறுப்பினர் எம்.பி.முத்துசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர். சுடலை முத்து நன்றி கூறினார்.
செய்துங்கநல்லூரில் முதல் முதலாக தனியார் பங்களிப்புடன் கண்காணிப்பு கமரா வைக்க உதவிய ஆசை வெண்ணிலா குழுவினரை பொதுமக்கள் பாராட்டினர்.


