ஊர் ஊராக சென்று பிச்சையெடுத்த கருங்குளம் ஒன்றிய பகுதியில் உள்ள 10 பள்ளிக்கு உதவிகளை முதியவர் ஒருவர் வழங்கினார்.
சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் பூல்பாண்டியன். (65). இவர் ஊர் ஊராக சென்று பிச்சை எடுப்பார். அதன் மூலம் கிடைக்கும் பணத்தினை கொண்டு கல்வி உபகரனங்கள் சேகரித்து பள்ளிகளுக்கு கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். இதற்கிடையில் இவர் கருங்குளம் ஒன்றிய பகுதியில் உள்ள 10 பள்ளிகளுக்கு உதவினார். இதற்கான விழா அனவரதநல்லூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணகி தலைமை வகித்தார். ஆசிரியர் டிலைட் வரவேற்றார். நன்கொடையாளர் பூல்பாண்டியன் அனைத்து பள்ளிகளுக்கும் கல்வி உபகரணங்கள் வழங்கினார். பள்ளி கல்வி அலுவலர் பாலசுந்தரி சிறப்புரையாற்றினார்.
இதில் அனவரதநல்லூர், சிங்காத்தாகுறிச்சி , கால்வாய் , சவலாபேரி , காசிலிங்கபுரம், வல்லநாடு , காசிலிங்கபுரம் , பக்கப்பட்டி , விட்டிலாபுரம், அகரத்தினை சேர்ந்த ஊராட்சி ஒன்றிய துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளும், ஆழிகுடி ஆர்.சி. துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டு உபகரணங்களை பெற்று கொண்டனர். பிச்சை எடுத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு உதவும் பூல்பாண்டியை ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினார்கள். ஜெயலெட்சுமி நன்றி கூறினார்.


