கால்வாய் ரயில்வே கேட் அருகே ரயில்வே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத நபர் ரயிலில் அடிப்பட்டு இறந்து கிடந்தார்.
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் ரயில்வே கேட் உள்ளது. இந்த கேட் வழியாக திருநெல்வேலி – திருச்செந்தூர் ரயில் செல்லும். இந்த இடத்தில் வீரளபேரி அருகே ரயில்வே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு கிடந்தார். இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலிசாருக்கு தகவல் கிடைத்தது. திருநெல்வேலி ரயில்வே போலிஸ், மற்றும் செய்துங்கநல்லூர் போலிஸ் இன்ஸ்பெக்டர ரகு ராஜன் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தினை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்து கிடக்கும் நபர் ஊதா கலரில் லுங்கி மற்றும் சட்டை அணிந்துள்ளார். காப்பி கலரில் ஜட்டி அணிந்திருன்தார். சுமார் 40 வயது மதிக்கத்தக்க அவர் யார். ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலிசார் விசாரித்து வருகின்றனர்.