மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்திய குடியுரிமைச் சட்டத்தை திருப்பபெற வலியுறுத்தி செய்துங்கநல்லூரில் கண்டன பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடந்தது. இதில் செய்துங்கநல்லூர் சுற்று பகுதியில் உள்ள ஜமாத்தார் கலந்து கொண்டனர்.
தமிழம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்திய குடியுரிமைச் சட்டத்தை திருப்பபெற வலியுறுத்தி பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்திய குடியுரிமைச் சட்டத்தை திருப்ப பெற வலியுறுத்தி செய்துங்கநல்லூரில் மாபெரும் கண்டன பேரணி நடந்தது.
இந்த பேரணி செய்துங்கநல்லூர் முகைதீன் ஜாமியா பள்ளி வாசல் முன்பு துவங்கியது. ஊரின் முக்கிய வீதிகள் வழியாக மெயின் ரோட்டை அடைந்தது. அங்கு திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலை வழியாக செய்துங்கநல்லூர் அண்ணா சிலை அருகே வந்தடைந்தது. பின்னர் அங்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான செய்துங்கநல்லூர் சுற்று பகுதியில் உள்ள ஜமாத்தை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். பேரணியில் மத்திய அரசுவுக்கு எதிரான பதாகைகளுடன் கலந்து கொண்டனர். கோஷங்கள் எழுப்பினர்.
இந்த போராட்டத்தில் செய்துங்கநல்லூர் சுற்றுவட்டார கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அப்துல் காதர் வரவேற்புரை ஆற்றினார். அய்யா வழி பாலமுருகன், வஃப்போர்ட் கமிட்டி முன்னாள் தலைவர் ஹைதர்அலி, மாநில செயற்குழு உறுப்பினர் ரபிக் உள்பட பலர் கலந்துகொண்டு பேசினர். ஒருங்கிணைப்பு குழு கமிட்டி உறுப்பினர் சுஹைல் நன்றி கூறினார்.


