செய்துங்கநல்லூரில் ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்ற தந்தை மகன் கைது செய்யப்பட்டனர்.
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரில் நூதன முறையில் லாட்டரி சீட்டு விற்பதாக போலிசுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து செய்துங்கநல்லூர் உதவி ஆய்வாளர் சிலுவைஅந்தோணி தலைமையில் போலிசார் மர்ம நபர்களை தேடி அலைந்தனர்.
இதற்கிடையில் செய்துங்கநல்லூர் பேருந்து நிலையம் அருகே நின்றிருந்த இரண்டுபேர் மீது போலிசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை சப் இன்ஸ்பெக்டர் சிலுவை அந்தோணி மடக்கி பிடித்தார். ஆனால் அவர்கள் இருவரும் உதவி ஆய்வாளர் சிலுவை அந்தோணியை தரக்குறைவாக பேசி விட்டு அங்கிருந்து தப்பிக்கு முயற்சி செய்தனர். அவர்களை பிடித்து காவல் நிலையத்தில் வைத்து விசாரித்த போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. செய்துங்கநல்லூர் படையாச்சித் தெருவைச்சேர்ந்த முருகன் அவரது மகன் சரவணன் என்பதும் அவர்கள் இருவரும் ஆன்லைன் மூலம் ஒற்றை இலக்க லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தனர் என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து ஒரு ஸ்மார்போன் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.
இருவர் மீதும் செய்துங்கநல்லூர் போலிசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். தடை செய்யப்பட்டுள்ள இணையதள ஒற்றை இலக்க லாட்டரிச் சீட்டு விற்பனை கிராம புறத்தில் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.