செய்துங்கநல்லூர் அருகே கருங்குளத்தில் பதுங்கியிருந்த கொலை குற்றவாளி கைது செய்யப்படடார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 1996ம் ஆண்டு ஒருவர் கொலை செய்யப்பட்டார். அந்த கொலைக்கான குற்றவாளியை போலிசார் கண்டு பிடிக்கமுடியாமல் திணறி வந்தனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளத்தைச் சேர்ந்த ஜோசப் மகன் ஜான்சன் என்பவர் தான் அந்த கொலை குற்றவாளி என தெரிய வந்தது. எனவே அவரை போலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். அதன்பின்னர் ஜாமினில் வெளியை வந்த அவர் எங்கு சென்றார் என தெரியவில்லை.
இதற்கிடையில் கடந்த 2004ம் ஆண்டு அந்த கொலை குற்றத்திற்காக ஜான்சனுக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது. இந்நிலையில் போலிசாரிடம் சிக்காமல் தப்பித்து விட்டார். 16 ஆண்டுகள் கழித்து செய்துங்கநல்லூர் போலிசாருக்கு ஜான்சன் கருங்குளத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து செய்துங்கநல்லூர் உதவி ஆய்வாளர் சிலுவை அந்தோணி தலைமையில் போலிசார் ஜான்சன் வீட்டிற்கு சென்று அங்கு இருந்த ஜான்சனை மடக்கி பிடித்தனர். அதன்பின்னர் திருவள்ளூர் மாவட்ட போலிசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பின்னர் அங்கு வந்த திருவள்ளூர் போலிசாரிடம் ஜான்சனை ஒப்படைத்தனர்.