செய்துங்கநல்லூரில் வேலைவாய்பு முகாம் நடந்தது. செய்துங்கநல்லூரில் உள்ள கருங்குளம் ஒன்றிய பொது சேவை மையத்தில் நடந்த முகாமிற்கு திட்ட இயக்குனர் ரேவதி தலைமை வகித்தார். ஒன்றிய ஆணையாளர் சுப்புலெட்சுமி, கூடுதல் ஆணையாளர் வெங்கிடாசலம் , துணைசேர்மன் முருகப்பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருங்குளம் ஒன்றிய சேர்மன் கோமதி ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பணி நியமன ஆணையை வழங்கினார். முன்னதாக துணை திட்ட இயக்குனர் ஜெரோம் வரவேற்றார். நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டிபன்ரத்தினகுமார், சுல்தான் அலாவூதீன், வட்டார மகளிர் திட்ட மேலாளர் மல்லிகா, வட்டார ஒருங்கிணைப்பாளர் பானுமதி, பாக்கியலெட்சுமி , கிரேசி உள்பட பலர்கலந்துகொண்டனர். தமிழகத்தில் பல்வேறு இடத்தில் இருந்து வந்திருந்த 15 நிறுவனங்கள் இந்த முகாமில் கலந்துகொண்டனர். 478க்கும் மேற்பட்ட பயனாளிகள் இந்த முகாமில் கலந்துகொண்டு, தங்களுக்கு வேண்டிய துறையில் தங்களுக்கு தேவையான பணியினை தேர்ந்தெடுத்தனர். 118 பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.


