ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என்று ஏறு தழுவுதல் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கோரிக்கை விடுத்து வந்தனர். ஜல்லிக்கட்டு போட்டி நடத்திட மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிப்பதில் காலம் தாழ்த்தி வந்தனர்.
இந்நிலையில் ஏறு தழுவுதல் பாதுகாப்பு இயக்கத்தினர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் நாடாளுமன்ற எம்.பி. ரவிந்தரநாத்குமார் ஆகியோரிடம் இதுகுறித்து மனு அளித்தனர். இதனைத்தொடர்ந்து ஜனவரி பத்தாம் தேதி தூத்துக்குடி மாவட்ட சார் ஆட்சியர் சிம்ரான் ஜித்சிங்க ஹாலோன் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதியில் உள்ள இடங்களையும் ஸ்ரீவைகுண்டம் புதிய பாலத்தின் பகுதியிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவதே குறித்து முதற்கட்ட ஆய்வு மேற்கொண்டனர்.இந்நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ ஆய்வு வருவாய்துறை, பொதுப்பணித்துறை மற்றும் காவல்துறையினர்களுடன் இணைந்து ஆய்வு செய்தார்.
ஶ்ரீவைகுண்டம் தாசில்தார் சந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன், பொதுப்பணித்துறை பிரிவு அலுவலர் ரகுநாத் மற்றும் ஏறுதழுவுதல் பாதுகாப்பு இயக்க ஒருங்கினைப்பாளர் புதுக்குடி ராஜா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


