செய்துங்கநல்லூர் ஆர்.சி. நடுநிலைப்பள்ளியில் தேசிய வாக்காளர் தினம் நடந்தது.
செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை ரமணி பாய் , விவசாய சங்க தலைவர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் ஸ்டாலின் வரவேற்றார். ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் துணைவட்டாச்சியர் சிவகுமார் , செய்துங்கநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் முத்து கிருஷ்ணன், செய்துங்கநல்லூர் வருவாய் ஆய்வாளர் இருதய மேரி, கிராம நிர்வாக அலுவலர் சந்தனகுமார், கந்தசுப்பு, பாண்டி பெருமாள், கிராம பிரமுகர்கள் மாரியப்பன், சுடலை முத்து, வாக்காளர் தொடர்பு அலுவலர்கள் சோமு, சித்திரைவடிவு, லீலா, மேரி, பானு, பேட்ரிக்ஸ், மீனா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் தாசில்தார் சந்திரன் பேசும் போது, வாக்காளர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வாக்குகளை 100 சதவீதம் அளிக்க முன்வரவேண்டும். பணம் வாங்கி கொண்டு வாக்களிப்பதை தவிர்க்க வேண்டும். பணத்துக்கு முன்னுரிமை கொடுத்தால் ஏழை எளிய மக்கள் பதவிக்கு வருவது மறைமுகமாக தடுக்கப்படும். எனவே நமது சமுதாய கடமையாற்றி வருங்கால இந்தியாவின் முன்னேற்றத்துக்கு பாடுபட வேண்டும் என்று அவர் பேசினார். இதில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


