செய்துங்கநல்லூர் அருகே உள்ள முத்தாலங்குறிச்சி ஆற்றங்கரை புனித அந்தோணியார் ஆலய திருவிழா நடந்தது.
முத்தாலங்குறிச்சி பாதுகாவலர் ஆற்றங்கரை புனித அந்தோணியார் திருவிழா கடந்த 7 ந்தேதி மாலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. அதன் பிறகு தினமும் திருப்பலி நடந்தது. கடந்த 19 ந்தேதி 11 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலி நடந்தது. இதற்கான கூட்டுத் திருப்பலியை நாட்டார்குளம் பங்குதந்தை அருட்தந்தை ராபின் ஸ்டான்லி, பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி அருட்தந்தை லாயா, செய்துங்கநல்லூர் பங்குத்தந்தை ஆரோக்கிய லாசர் ஆகியோர் நடத்தினர். அதன் பின் அசன உணவு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நாட்டார்குளம் பங்கு தந்தை ராபின் ஸ்டான்லி, முத்தாலங்குறிச்சி இறை மக்கள், கருங்குளம் திரு இருதய சபை அருட்சகோதரிகள் செய்திருந்தனர்.


