தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஒன்றியம் ஆறாம்பண்ணை பஞ்சாயத்தில் பொங்கல் பரிசு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. ஆழ்வார்கற்குளம் தொடக்க வேளாண் கடன் சங்க தலைவர் அய்யாத்துரை தலைமை வகித்தார். வங்கி செயலாளர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பஞ்சாயத்து தலைவர் சேக் அப்துல் காதர் பரிசு பணம் மற்றும் பொருள்களை வழங்கினார். கிராம நிர்வாக அதிகாரி கமல்ராஜ், அப்துல் கனி, வார்டு உறுப்பினர் அப்துல் கனி, இப்ராகீம் கனி, இயக்குனர் ஜாகீர் உசேன், சீனிவாசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


