தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மாவட்ட நியமன அலுவலர் உணவுபாதுகாப்புத்துறை மற்றும் மருந்து நிர்வாகம் சார்பில் கருங்குளம் மற்றும் செய்துங்கநல்லூரில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். கருங்குளம் மற்றும் ஸ்ரீவைகுண்டம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நாகசுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர், கேரிபேக், பிளாஸ்டிக் கப், பேப்பர் கப், பிளாஸ்டிக் இலைகளை சுமார் 10000 மதிப்புள்ள பொருட்களை கண்டுபிடித்து அழித்தனர். பின்னர் அந்த கடைகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
மேலும் தீபாவளி பண்டிகைக்கு பலகாரம் செய்து விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு ஸ்ரீவைகுண்டம் வியாபாரிகள் சங்க கட்டிடத்தில் வைத்து ஆலோசனை கூட்டம் நடந்தது. தீபாவளி பலகாரங்கள் தயாரித்து விற்பனை செய்பவர்கள் அனைவரும் உணவுபாதுகாப்புத்துறையில் உரிமம் பெற்றிருக்க வேண்டும் பயன்படுத்தப்பட்ட எண்ணெயை மீண்டும் பயன்படுத்தப்பட்ட எண்ணெயை பயன்படுத்த கூடாது என விற்பனையாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது.


