இராமனுஜம்புதுரில் பயங்கரம். ஹெல்மெட் அணிந்த மர்ம கும்பல் தாக்குதலில் தெருவில் பேசிக்கொண்டிருந்து மூன்று பேர் படுகாயம். பரபரப்பு.
சேரகுளம் போலிஸ் சரகம் இராமனுஜம்புதூரை சேரந்தவர் திரவியம் மகன் சங்கரநாரயணன்(50), சண்முகம் மகன் ஆயிரம்(50), பிச்சன் மகன் பூவலிங்கம் (38). இவர்கள் நேற்று இரவு 7.30 மணி அளவில் இராமனுஜம்புதூர் கண்ணன் சிலைக்கு முன்பு தெருவில் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது இரண்டு மோட்டார் பைக்கில் வந்த ஹெல்மெட் அணிந்து வந்த 4 நபர்கள் அவர்களை சராமரியாக வெட்டினர். இதில படுகாயம் அடைந்த அவர்கள் கீழே சரிந்தனர். அதன் பின் அங்கிருந்து மர்மநபர்கள் மோட்டார் பைக்கில் ஏறி தலைமறைவானார்கள். படுகாயம் அடைந்த மூன்று பேரையும் பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் . அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறிதது சேரகுளம் போலிசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.


