ஸ்ரீவைகுண்டத்தினை சேர்ந்த தூத்துக்குடி மாவட்ட சிவாஜி மன்ற செயலாளர் முருகேசன் மாவட்ட ஆட்சி தலைவருக்கு மனு ஒன்று அனுப்பியுள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது.
நெல்லை – திருச்செந்தூர் மெயின்ரோட்டில் உள்ள ஆதிச்சநல்லூர் பாலம் மிககுறுகலாக இருப்பதால் பல வாகன ஓட்டிகள் கருங்குளத்தில் இருந்து கொங்கராயகுறிச்சி வழியாக ஸ்ரீவைகுண்டம் வருகிறார்கள். பெரும்பாலும் புரட்டாசி சனி கிழமை நவத்திருப்பதி தரிசனம் செய்யும் பெரும் பாலான வாகனங்கள் இந்த வழியாகத்தான் வந்து செல்கிறது. ஆனால் இந்த இடத்தில் சுமார் பத்துக்கு மேற்பட்ட வேகத்தடைக்கள் உள்ளது. இதனால் இருசக்கரத்தில் வருபவர்கள் விபத்தில் சிக்குகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் வேன் போன்ற வாகனத்தில் வருபவர்களும் தடுமாறி செல்கிறார்கள். எனவே இந்த இடத்தில் உள்ள வேத்தடைகளை அகற்ற வேண்டும். அல்லது வேகத்தடை உள்ளது என்பதை அறிவிக்க வெள்ளை பெயிண்ட் அடித்து, அருகில் விளம்பர பலகை வைக்க வேண்டும். என்று அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.
முக்கிய பிரச்சனையை உடனே தீர்க்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.