கீழ செக்காரக்குடி கிராம சேவை மையத்தில் வைத்து காசநோய் விழிப்புணர்வு தேசிய ஊட்டசத்து மாதவிழா நடந்தது. துணை இயக்குனர் மருத்துவ ப்பணிகள் டாக்டர் சுந்தரலிங்கம் தலைமை வகித்தார். கீழ செக்காரக்குடி மருத்துவ அலுவலர் டாக்டர் பன்னீர் செல்வம் முன்னிலை வகித்தார். முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல் ரகீம் ஹீரா வரவேற்றார்.முகாமில் கலந்துகொண்ட அனைவருக்கும் காசநோய் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
மாவட்ட காசநோய் மைய தீர்வு முறை அமைப்பாளர் குப்பு சாமி நன்றி கூறினார். மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் சந்தான சங்கர் வேல், செல்லப்பா, செல்வந்தி மகளிர் சுய உதவிக்குழு முத்துமாரி, பஞ்சாயத்துபணியாளர் கன்னியம்மாள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பரிவு மற்றும் செக்காரக்குடி பஞ்சாயத்து நிர்வாகம் இணைந்து செய்திருந்தது.


