சேர்வைக்காரன்மடம் கிராமத்தில் தனி நபரின் நடைபாதை ஆக்கிரமிப்பு காரணமாக 11 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சேர்வைக்காரன்மடம் கிராமம், புதுமனை – காமராஜர் ஆதித்தனார் சாலை இணைப்பு பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தும் 8 அடி அகல நடைபாதை மீது ஒரு நபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த 11 குடும்பங்கள் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், “அரசு விதிப்படி சர்வேயர் அளவீடு செய்து கல் நட்டிருந்த போதிலும், அந்த நபர் கற்களை அகற்றி மீண்டும் வேலி அமைத்து நடைபாதையை ஆக்கிரமித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் வசிக்கும் 11 குடும்பங்கள் வீடுகளுக்குச் செல்ல முடியாமல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள், அரசு அளவீட்டு கல் மீண்டும் நட்டுவைத்து நடைபாதையை நிரந்தரமாகப் பாதுகாக்கவும், ஆக்கிரமிப்பு செய்த நபருக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த மனு நகல்கள் சப்-கலெக்டர், தாசில்தார், சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா, கிராம நிர்வாக அலுவலர், வருவாய் அலுவலர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் சண்முககையா எம்எல்ஏ, சப் கலெக்டர், தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் அலுவலர் ஆகியோருக்கு அனுப்பியுள்ளதாகவும், கோரிக்கையை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.


