தூத்துக்குடியில் நாளை (ஆகl4-ஆம் தேதி), தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
தூத்துக்குடியில் சில்லாதத்தம் சிப்காட் பகுதியில் வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையை நாளை ஆகஸ்ட் 4-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று திறந்து வைக்க உள்ளார். இதற்காக காலை 9 மணிக்கு சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் புறப்படுகிறார்.
விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் வின்பாஸ்ட் தொழிற்சாலைக்கு செல்கிறார். காலை 10.15 மணிக்கு வின்பாஸ்ட் தொழிற்சாலையை திறந்து வைத்து கார் விற்பனையை தொடங்கி வைக்கிறார். இதை தொடர்ந்து காலை 11 மணிக்கு தூத்துக்குடி மாணிக்கம் மகாலில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார்.
மாநாட்டில் பல்வேறு தொழில் முதலீடுகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து இடப்படுகிறது. மேலும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன. நிகழ்ச்சி முடிந்ததும் மதியம் 12.45 மணியளவில் தூத்துக்குடி விமான நிலையம் சென்று தனி விமானம் மூலம் சென்னை திரும்புகிறார். முதல்வரை வரவேற்க தெற்கு வடக்கு மாவட்ட திமுக சார்பில் அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் மாபெரும் வரவேற்பு அளிக்கப்படுகிறது.


