ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய மாணவர்படை சார்பில் தேசிய ஒற்றுமை தினம் கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் மேல்நிலைப்பள்ளியில் இன்றைய தினம் தேசிய மாணவர்படை சார்பில் ஒற்றுமை தினம் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் முத்துசிவன் தலைமை வகித்தார். முதுகலை வரலாற்று ஆசிரியர் முத்தையா தேசியமாணவர் படை மாணவர்களிடையே தேசிய ஒற்றுமை தினம் பற்றி சிறப்புரையாற்றினார். விழாவில் மாணவர் படையின் அணிவகுப்பு பள்ளியை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது. நிகழ்ச்சியை பள்ளியின் தேசிய மாணவர் படை ஆசிரியர் மாணிக்கம் ஏற்பாடு செய்து நன்றியுரையாற்றினார்.


