ஸ்ரீ வைகுண்டம் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் பணியிட மாறுதல் ஆகி திருச்செந்தூர் சமூகப் பாதுகாப்பு வட்டாட்சியராகப் பதவியேற்க உள்ளார். அவரை செய்துங்கநல்லூரில் வைத்து பொருநை -ஆதிச்சநல்லூர் தொல்லியல் கழகம் சார்பில் பாராட்டி வழியனுப்பி வைத்தனர். இந்த நிகழ்ச்சிக்கு பொருநை ஆதிச்சநல்லூர் தொல்லியல் கழக நிறுவனர் மற்றும் தலைவர் முத்தாலங்குறிச்சி காமராசு தலைமை வகித்தார். தொல்லியல் கழகத்தினை சேர்ந்த நாட்டார் குளம் திருப்பதி, சின்னார்குளம் சுடலைமணி செல்வன் , ஆழிகுடி பிரவீன், பாளை ஆனந்த மூர்த்தி, கோபால் , கொங்கராயகுறிச்சி கிராம உதவியாளர் ஆனந்த் உள்படப் பலர் கலந்துகொண்டனர். வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணனுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. ஆதிச்சநல்லூரில் தொல்லியல் தளத்திற்குத் தேவையான உதவிகளைச் செய்த வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணனுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.


