ரிலையன்ஸ் அறக்கட்டளை மீனவர்கள் பாதுகாப்பாக தொழில் செய்வதற்காக கடல்கால நிலை குறித்த தகவல்களை இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையத்திடம் பெற்று குரல் வழி செய்திகள், கட்டணமில்லா அலைபேசி எண் மற்றும் வாட்ஸாப் மூலமாக தினமும் கொடுத்துவருகிறது. இது தவிர அவர்களின் வாழ்வாதாரத்திற்க்காக மீன்களை சுத்தமாக கையாளுதல், கடல் வளங்களை பாதுகாத்தல், மீன்பிடி இயந்திரங்களை பழுதுபார்த்தால், ஜிபிஸ் பயிற்சி போன்றவைகளை தேவையின் அடிப்படையில் மீனவ கிராமங்களில் நடத்தப்பட்டு வருகிறது. மீனவ மகளிரும் தங்கள் வாழ்வாதாரத்திற்க்காக தொழில் செய்வதற்காக மீன் கழிவுகளிருந்து மீன் அமிலம் தயாரிக்கும் பயிற்சி ராதாபுரம் தாலுகாவிலுள்ள தோமையார்புரம் கிராமத்தில் வைத்து நடைபெற்றது.
தோட்டக்கலை துறை முன்னாள் துணை இயக்குனர் ராஜகுமார் அவர்கள் மீன் கழிவுகளிருந்து மீன் அமிலம் தயாரிக்கும் செய்முறை விளக்கம் அளித்தார். இதில் இடிந்தகரை மற்றும் தோமையார்புரம் கிராமங்களில் உள்ள 30 மகளிர் இந்த பயிற்சியில் கலந்து கொண்டனர்.


