தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குமரெட்டையாபுரம் கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த குழந்தை வடிவில் அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பாலசுப்ரமணியசாமி திருக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் என்னும் திருக்குட நன்னீராட்டு பெருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதனை முன்னிட்டு அதிகாலை 4 மணி அளவில் மங்கல இசை, திருமுறை பாராயணம், ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை, புன்யாகவாஜானம், நான்காம் கால யாகசாலை பூஜை, பிம்பசுத்தி, பிம்பரக்க்ஷாபந்தனம்ஸ்பர் சஹாதி (நாடி சந்தானம்) விசேஷ திரவியாஹீதி, யாகத்தில் பட்டு வஸ்திரம் சமர்ப்பணம், மகாபூர்ணாஹீதி, தீபாரணை வேதாபாரபயணம், கோபூஜை,யாத்திர தானம், யாகசாலையில் இருந்து திருக்குடங்கள் புறப்பாடு நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் கன்னியாள கணத்தில் பிரதான கோபுர ராஜகோபுரங்களுக்கும், அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமிக்கும் பரிவார மூர்த்திகளுக்கும், ஏககாலத்தில் மகா கும்பாபிஷேக விழா மற்றும் மகா தீபாரணை ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து பாலசுப்பிரமணியசாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் மற்றும் பல்வேறு வகையான சிறப்பு அலங்கார பூஜை மற்றும் மகா தீபாதாரணை மந்திர புஷ்பாஞ்சலி சதுர்வேத பாராயணம் மகா கும்பாபிஷேக அருட்பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருக்கோவிலின் மாசி மகம் தேர் திருவிழா, மகா கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்றதால் இரண்டு ஆண்டுகளாக தேர் திருவிழா நடைபெறாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.