தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் ஆட்சியர் தெரிவித்ததாவது தற்போது வேளாண்மை விரிவாக்க மையங்களில் நெல் 124 மெ.டன் கம்பு 18 மெ.டன், உளுந்து 303.47 மெ.டன், பாசிப்பயறு 14.82 மெ.டன்;; நிலக்கடலை 1.8 மெ.டன் சூரியகாந்தி 0.3 மெ.டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. வரும் பருவத்திற்கான விதைகள் கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
மாவட்டத்திலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் 3007 மெ.டன் யூரியா, 2771 மெ.டன் காம்ப்ளக்ஸ், 3540 மெ.டன் டி.ஏ.பி மற்றும் 480 மெ.டன் பொட்டாஷ் உரங்கள் இருப்பில் உள்ளன. நடப்பு ஆகஸ்ட், 2023 மாத தேவைக்கு நமது மாவட்டத்திற்கு 1500 மெ.டன் யூரியா, 1610 மெ.டன் காம்ப்ளக்ஸ் மற்றும் 635 மெ.டன் டி.ஏ.பி ஒதுக்கீடு செய்யப்பட்டு சம்மந்தப்பட்ட உர நிறுவனங்களால் இம்மாத தேவைக்கான உரங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
2021-22-ஆம் ஆண்டு ராபி பருவத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் உளுந்து பயிருக்கு ரூ.13.23 கோடி,பாசிப்பயறுக்கு ரூ.4.69 கோடி, சூரியகாந்தி பயிருக்கு ரூ.0.84 கோடி,நெல் பயிருக்கு ரூ.5.23கோடி,மக்காச்சோளம் பயிருக்கு ரூ.15.67 கோடி,கம்பு பயிருக்கு ரூ.4.08 கோடி,பருத்தி பயிருக்கு ரூ.3.83 கோடி,நிலக்கடலை பயிருக்கு ரூ.0.21கோடி,எள் பயிருக்கு ரூ.0.03 கோடி,சோளம் பயிருக்கு ரூ.4.43 கோடி என ஆக மொத்தம் ரூ.52.24கோடி 46756 விவசாயிகளுக்கு இப்கோ-டோக்கியோ காப்பீட்டு நிறுவனத்தால் பயிர் காப்பீட்டுத்தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.
2021-22; ஆண்டு ராபி பருவத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ்; வெங்காயம், வாழை, கொத்தமல்லி மற்றும் சிவப்புமிளகாய் பயிர்களுக்கு ரூ.23.86 கோடி இழப்பீட்டுத் தொகையானது15087 விவசாயிகளுக்கு இப்கோ-டோக்கியோ காப்பீடு நிறுவனத்தால் விடுவிக்கப்பட்டுவிட்டது.
2022-2023-ஆம் ஆண்டில் இத்திட்டம் 120 கிராமபஞ்சாயத்துக்களில் செயல்படுத்தப்படுகிறது. கிராமபஞ்சாயத்துக்களில் உள்ளதரிசுநிலங்களின் அடிப்படையில் இதுவரை 52 தரிசுநிலதொகுப்புகள் கண்டறியபட்டுஆழ்துளைகிணறுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகிறது. மேலும் 2022-23 ஆம் ஆண்டில் வேளாண் இடுபொருட்களான 71280 தென்னங் கன்றுகளும், 7326 லிட்டர் திரவஉயிர் உரமும் 1485 மின்கலன் மூலம் இயங்கும் தெளிப்பான் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
2023-24 ஆம் ஆண்டில் 87 கிராமபஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றில் அடிப்படைபுள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டு, தரிசுநிலங்களின்; அடிப்படையில் இதுவரை 9 தரிசுநில தொகுப்புகள் அமைக்கப்பட்;டுள்ளது. 2023-24ல் தேர்வு செய்யப்பட்ட கிராம பஞ்சாயத்துகளுக்கு இதுவரை 21750 தென்னங்கன்;றுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டில் (2023-24) வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் விவசாய நிலங்களில் நுண்ணீர் பாசன அமைப்பு நிறுவிட இலக்காக 400 எக்டர் பரப்பளவிற்கு ரூ.503 இலட்சம் நிர்ணயம் செய்யப்பட்டு திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுவரை 380.42 எக்டர் பரப்பளவில் நுண்ணீர் பாசனம் அமைக்க விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். இதுவரை 253.26 எக்டர் பரப்பளவிற்கு பணி ஆணை வழங்கப்பட்டு 141.79 எக்டர் பரப்பளவிற்கு பணிகள் நிறைவு பெற்றிருக்கின்றன. இத்திட்டத்தில் நுண்ணீர் பாசனம் அமைக்க சிறு/குறு விவசாயிகளுக்கு 100% மானியமும் ஏனையோருக்கு 75% மானியமும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி விண்ணப்பித்து பயனடையலாம் என்று ஆட்சியர் தெரிவித்தார்.


