தருவைகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் வட்டம் தருவைகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் இன்று வழங்கினார். விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா உட்பட பலர் கலந்து கொண்டனர்


