தொழில் வர்த்தகர் சங்க செயற்குழு கூட்டம் (30/7/2023) மாலை வெங்கடேஸ்வரா மகாலில் வைத்து நடைபெற்றது இதில் தொழில் வர்த்தகர் சங்க தலைவர் ஐயப்பன் அவர்கள் தலைமை வகித்தார்கள் செயலாளர் கனகராஜ் பி ராயர் அவர்கள் முன்னிலை வகித்தார்கள்
இதில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
1. திருச்செந்தூர் டு பாலக்காடு டு திருச்செந்தூர் செய்துங்கநல்லூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்குமாறு தெற்கு ரயில்வே கேட்டுக் கொள்வது
2; செய்துங்கநல்லூர் மின்வாரிய அலுவலகத்தை செய்துங்கநல்லூரில் நிரந்தரமாகஇருக்குமாறு மின்வாரிய அலுவலகத்தை கேட்டுக் கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இதில் பொருளாளர் ஆதம் இணைச் செயலாளர் அருண் ஆறுமுகம் துணைத் தலைவர் குரு மாரியப்பன் துணைச் செயலாளர்கள் நவாஸ் கணபதி துணை பொருளாளர் அப்துல் கனி உட்பட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் இறுதியாக கௌரவ தலைவர் அய்யா குட்டி அவர்கள் நன்றி கூறினார்கள்


