தூத்துக்குடி சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ள மின்னனு வாக்கு பதிவு இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் பார்வையிட்டார்.
தூத்துக்குடி மாநகராட்சி ஜார்ஜ் ரோட்டில் உள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ள திருச்செந்தூர் சட்டமன்ற பொதுத்தேர்தல் 2016ல் பயன்படுத்தப்பட்ட மின்னனு வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்கு மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தலைமையில் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று திறக்கப்பட்டு பார்வையிட்டனர்.


