தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் இடையே மதுரை வழியாக வாரம் மும்முறை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க தென்னக ரயில்வே பரிந்துரை செய்துள்ளது.
தமிழகத்தின் தொழில் நகராக தூத்துக்குடி விளங்குகிறது. தென் இந்தியாவின் மான்செஸ்ட்டராக கோவை விளங்குகிறது. தொழில், வர்த்தகம், கல்வி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக தென் மாவட்டங்களில் இருந்து அதிகளவில் கோவைக்கு சென்று பணி செய்து வருகின்றனர். தூத்துக்குடி – கோவை இடையே இயக்கப்பட்டு வந்த இணைப்பு ரயில் கரோனா காலத்தில் நிறுத்தப்பட்டு உள்ளது.
தூத்துக்குடியில் இருந்து கோவைக்கு நேரடி ரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது. இந்நிலையில், “மேட்டுப்பாளையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு மதுரை வழியாக வாரம் 3 ரயில்களை இயக்க ரயில்வே பரிந்துரை செய்துள்ளது. இது தொடர்பாக ரயில்வே வாரியத்தின் அனுமதி கிடைத்த உடன் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


