தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் வட்டாரம் மணக்கரை ஊராட்சியில் உள்ள காளிமார்க் தனியார் நிறுவனத்தில் வைத்து இன்று உலக புகையிலை எதிர்ப்பு நாள் கடைப்பிடிக்கப்பட்டது இவ்விழாவிற்கு மாவட்ட நலக் கல்வியாளர் அந்தோணிசாமி மற்றும் மாவட்ட பூச்சியியல் வல்லுநர் திரு ஆனந்தன் ஆகியோர் தலைமை தாங்கினார் நடமாடும் மருத்துவக் குழு மருத்துவ அலுவலர் மரு கார்த்திக் முன்னிலை வகித்தார் முன்னதாக அந்நிறுவன மேலாளர் லட்சுமிநாராயணன் அனைவரையும் வரவேற்றார்
புகையிலை தடுப்புச் சட்டங்கள் பொது இடங்களில் புகையிலை பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து கருங்குளம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் திரு முத்துக்குமார வெங்கடேசன் பேசினார் பின்பு சுகாதாரத் துறையினர் கூறியதாவது உலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் சேர்ந்து இந்நாளை 1987ம் ஆண்டில் சிறப்பு நாளாக அறிவித்தது. உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது. இச்சிறப்பு நாளின் அறிவிப்பு மூலம் உலக சுகாதார நிறுவனம் ஆண்டுதோறும் புகையிலை சம்பந்தமான சுமார் 3.5 மில்லியன் இறப்புகளைக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கிறது.தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் சுமார் 28 லட்சம் பேர் புகையிலையை ஏதாவது ஒரு வடிவத்தில் பயன்படுத்துகிறார்கள்.
புகையிலையை இருவர் பயன்படுத்தினால் அதில் ஒருவர் இறப்பதற்கு காரணம் அந்த புகையிலைதான். இந்தியாவில் புகையிலை சார்ந்த நோய்களின் பாதிப்பால் நாள் ஒன்றுக்கு சுமார் 2 ஆயிரத்து 500 பேரும், ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் பேரும் மரணம் அடைகின்றனர். புகையிலையின் பாதிப்பால் நம் நாட்டில் மட்டும் 30 நிமிடத்திற்கு ஒருவர் இறந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது மிகவும் வேதனைக்குரியது.
ஆண்களுக்குப் போட்டியாகப் பெண்களும் அதிக அளவில் புகையிலை பயன்படுத்துகிறார்கள் என்கிறது உலகச் சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வு என்று பேசினார்கள். புகையிலை எதிர்ப்பு தினம் பொதுமக்களுக்கு புகையிலையின் தீமைகளை எடுத்து கூறும் பொருட்டு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. புகையிலை இல்லாத வாழ்க்கை ஆரோக்கியமானது மட்டுமல்ல சாத்தியமும் கூட என்று கூறப்பட்டது. இறுதியாக இத் தினத்தை முன்னிட்டு புகையிலைப் பொருட்களை யாதொரு வடிவிலும் உட்கொள்ள மாட்டேன் என்று அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர் மேலும் சுகாதார ஆய்வாளர்கள் ஜாகிர் ஜான் ஜெபஸ்டின் சீனிவாசன் செவிலியர் டாரதி சுகாதாரத் துறை பணியாளர்கள் மற்றும் காளிமார்க் நிறுவன பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள் .


