1.எம்.சி. வீரபாகு பிள்ளை தோற்றம்
1903-ல் தூத்துக்குடியில் பிறந்தார். இவர் வழககறிஞர். பள்ளிக்கூட நாட்களிலே கதர் விற்பனையில் ஈடுபட்டார். 1931-ல் ஸ்ரீவைகுண்டம் தாலுகா ராஜாஜி தலைமை தாங்கி அரசியல் மா நாட்டிற்கு வரவேற்புக் கமிட்டித் தலைவராய் பணியாற்றினார். ஜில்லா காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக 1934-ல் பொறுப்பேற்று ஜில்லாவெங்கும் காங்கிரஸ் பணிகளைத் தொடங்கினார். ஒவ்வொரு கிராமத்திலும் கிராம காங்கிரஸ் கமிட்டிகளை நிறுவி காங்கிரஸ் வேலைகளை முடுக்கி விட்டார். 1938-ல் களக்காடு தொகுதியில் போட்டியின்றி ஜில்லா போர்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு டிசம்பர் 8-ம் தேதி ஜில்லா போர்டுக்குத் தலைவரானார். 1940 டிசம்பர் 8-ம்தேதி யுத்த மறுப்பு சத்தியாக்கிரகம் செய்து சிறைத்தண்டனை அடைந்தார். சுதந்திரத்துககு பின் அரசியல் நிர்ணயசபைக்கு உறுப்பினரானார். அதன் பின் பார்லிமெண்டுக்கும் உறுப்பினராகி போக்குவரத்து கமிட்டி, உள்பட பல கமிட்டிகளில் அங்கம் வகித்துப் பணி செய்தார். இவர் 14.-4.-1976 ல் மறைந்தார்.
2.இராமசுப்பு என்ற வேணுகோபால் ஐயர் கோவில்பட்டி
– இவர் 1916 ல் பிறந்தார். தகப்பனார் கல்யாணராமையர். 1930 முதல் காங்கிரஸில் ஈடுபட்டு சட்டமறுப்பு இயக்கம், ஒத்துழையாமை இயக்கம் போன்ற போராட்டங்களில் கலந்து கொண்டார். கோவில்பட்டியில் சோமயாஜுலு தலைமையிலும் கழுகுமலை யில் குப்தா தலைமையிலும் கள்ளுக்கடை மறியல், அன்னியத்துணி பகிஷ்காரம் ஆகிய போராட்டங்களில் ஈடுபட்டு தடியடிபட்டு இன்னல் அடைந்துள்ளார். சங்கரன்கோவில் சப்ஜெயிலில் ஒரு வாரம் தண்டனை அனுபவித்துள்ளார். இன்றுவரை அரிஜன சேவையிலும், பஜனைகளிலும், பொதுத் தொண்டுகளிலும் ஈடுபட்டு வந்தார்.
3. வலேரியன் பர்னாந்து
இவர் 21&-1&-1909 அன்று வீரபாண்டியன் பட்டணத்தில் பிறந்தார். 1930-ல் தேசிய இயக்கத் தில் கலந்துகொண்டார். 1930-&32-ல் சட்டமறுப்பு இயக்கத்தில் 4 மாதம் சிறைவாசமும், 1941-ல் யுத்த எதிர்ப்பு கோஷம் செய்ததற்காக 5 மாதம் சிறைவாசமும் அலிப்புரம், திருச்சி சிறைகளில் அனுபவித்தார். முழு நேர தேசிய ஊழியர். ஜில்லாக்களில் நடக்கும் மகா நாடுகளில் கலந்து கொள்பவர்.
4. சிவலிங்கம்பண்ணையார்
சிவலிங்கம் பண்ணையார் 10-.4-.1900 பிறந்தார். 1930-ல் உப்புச்சத்தியாகிரகத்தில் 6 மாதம் சிறைவாசம் சென்றார். 1932-ல் 6 மாதம் சிறைவாசம். திருச்சிவீ£ப்பள்ளி, அலிப்புரம் சிறைகளில் தண்டனையை அனுபவித்தார். அவரது மனைவியும் தேச சேவையில் ஈடுபட்டார். சிறை சென்றவர்.
5. தியாகி வெ. சிவகுருநாதன்
1903-ல் தூத்துக்குடியில் பிறந்தார்; தகப்பனார் பெயர் வெங்கடாசலம் பிள்ளை. தாயார் பெயர் பொன்னம்மாள். மனைவி பெயர் முத்தம்மாள். 1923-லிருந்து அரசியலில் ஈடுபட்டவர் இவர். அவ்வாண்டில் நாகபுரியில் நடைபெற்ற கொடிச் சத்தியாக்கிரகத்திற்கு சென்று 15.-7.-1923-ல் கைதியாகி நாகபுரி சிறையில் 7 மாதங்கள் தண்டனை பெற்றார். 1923 இறுதியில் காக்கி நாடாவில் நடை பெற்ற காங்கிரஸ் மா நாட்டிற்கும் 1924-ல் பெல் காமில் நடைபெற்ற சிறப்பு காங்கிரஸ் மா நாட்டிலும் கலந்துகொண்டவர். கதர்தொண்டும் அரிஜனசேவையும் செய்தவர். விவசாயத் தொழிலாளர் மாநாடு நடத்தியுள்ளார். 1930 உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டு திருச்சி, கோவை, அலிப்புரம் சிறைகளில் 1 வருடம் தண்டனை அனுபவித்தார். 1956-ல் விதவைத் திருமணம் செய்துகொண்டார். 1932 சட்டமறுப்பு இயக்கத்தில் ஈடுபட்டு போராட்ட லட்சியங்களை விளக்கித் துண்டுப்பிரசுரம் வெளியிட்டார். ஜவுளிக்கடை மறியல் செய்தார். போலீஸாரால் பிரம்படியும் தடியடியும்பட்டார். பல கிராமங்களில் தேசிய சங்கங்கள் நிறுவி மக்களுக்குச் சேவை செய்து வந்துள்ளார்.
6. வி. சண்முகம் பிள்ளை
வி. சண்முகம் பிள். பிறப்பு 15.-1-1.910 அன்று பிறந்தார். 1930 முதல் தேசீய சேவையில் ஈடுபட்டுவந்தார். சிறந்த தியாகி. 1930-ல் போராட்டத்தில் முழுபங்கும் ஏற்றுக்கொண்டவர். 1931-ல் நடந்த மறியலில் 10 மாதமும் 1930-ல் உப்பு சத்தியாகிரகத்தில் 1 வருஷமும் சிறைத்தண்டனையை அனுபவித்தார். 1942-ல் வேலூர், தஞ்சாவூர் சிறைகளில் 261 மாதம் பாதுகாப்பு கைதியாக இருந்தார்.
7. பொ. சங்கரன் செட்டியார்
1915-ல் பாளையங்கோட்டையில் பிறந்தார். 1931-ல் காங்கிரஸில் அங்கத்தினரானார். அவ்வாண்டில் பாளையங்கோட்டையில் நடைபெற்ற ஜவுளிக்கடை மறியலில் ஈடுபட்டு போலீஸாரால் தடியடி பட்டுத் துன்புற்றார். 1932-ல் பாளையங்கோட்டையில் நடைபெற்ற பஞ்சாப் படுகொலை போராட்டத்தில் கடைகளை மூடச் சொல்லி போராட்டம் நடத்தினார். கோபால்சாமி கோயில் கோபுர உச்சியில் தேசியக் கொடி ஏற்றினார். இதனால் கைதாகி மதுரை, திருச்சி சிறை களில் 6 மாத கடுங்காவல் தண்டனை அடைந்தார்.
8. ரத்தினசாமி
சண்முகவேல் நாடார் மகனான அவர், சந்தையூர், உடன்குடியில் 1919-ல் பிறந்தார். 1942 ஆகஸ்டு புரட்சியில் பங்குகொண்டார். குலசேகரப்பட்டினம் கொலை வழக்கில் 6 மாதங்கள் தண்டனை அடைந்தார். 1962-ல் காலமானார்.
9. ராஜபாண்டியன்
1923-ல் ஆறுமுகநேரியில் பிறந்தார். 1941- தனிப் பட்ட நபர் சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டு போராடி ஒரு மாதம் தண்டனை அடைந்தார். 1912 புரட்சியின் போது ஆறுமுகநேரியில் கைதாகி திருச்செந்தூர் சப் ஜெயில், கொக்கிர குளம் சப்-ஜெயில்களில் ரிமாண்டில் வைக்கப்பெற்று அலிப்புரம் சிறையில் 1 ஆண்டுத் தண்டனை அனுபவித்தார்.
10. வி. ஆர். பொன்னம்பலம் 1916-ல் தூத்துக்குடியில் பிறந்தார். வயது 60. தகப்பனார் ராமசாமியா பிள்ளை. 1930-ல் கள்ளுக்கடை மறியல் போராட் டத்தின் போது கைது செய்யப்பெற்று வேலூர் சிறையில் 9 மாதம் தண்டனை பெற்றார். மீண்டும் 1931 போராட்டத்திலும் ஈடுபட்டு வேலூர் சிறையிலேயே 6 மாதம் தண்டனை அனுபவித்தார். பின்னர் சிலகாலம் கதர் இயக்கப் பணிகளிலும், தீண்டாமை ஒழிப்புப் பணிகளிலும் ஈடுபட்டு சேவை செய்து வந்தார். 1941 சத்தியாக்கிரகத்தில் தீவிரமாக ஈடுபட்டு போலீஸாரால் சித்திர வதைக்குள்ளாகி பின்னர் அலிப்புரம் சிறையில் 4 மாதங்கள் தண்டனை அடைந்தார். 1939-ல் தூத்துக்குடி நகர காங்கிரஸ் கமிட்டியில் அங்கத்தினர். 1940-ல் தூத்துக்குடி ஆஸாத் வாலிபர்
சங்கத்தின் தலைவர்.
11. பிச்சை என்ற ஆறுமுக நாடார்
திருச்செந்தூர் மன்னன் விளையில் 1901-ல் பிறந்தார். வயது 75. தகப்பனார் பெயர் வீரபாகு நாடார். 1932-சத்தியாக்கிரகத்தின் போது ‘கள்’ குடித்தவர் களையெல்லாம் பிடித்து ‘க’ என்ற அடையாளம் இட்டு, கரும்புள்ளி-செம்புள்ளி குத்தி, பட்டை நாமம் போட்டு, கழுதை மேல் ஏற்றி ஊர்வலமாக அழைத்துச் சென்று கள்ளுக்கடைகளைக் கொளுத்திய போராட்டத்தில் கலந்து கொண்டவர். இதனால், போலீஸாரால் சித்திரவதைக்குள் ளாகி திருச்செந்தூர், தூத்துக்குடி, கொக்கிரகுளம் சப்ஜெயில்களில் 7 மாதங்கள் வைக்கப்பெற்று தண்டிக்கப்பட் டார்.
12. பெருமாள் ரெட்டியார்
கோவில்பட்டியில் 1908 இல் பிறந்தார். திருச்சி ஹாலாஸ்யம் ஐயர் அமைத்த வட்டார காங்கிரஸ் கமிட்டியில் 1928 முதல் 1938 வரை தலைவராக இருந்தார். 1930-32-ல் கள்ளுக்கடை மறியல், அன்னியத்துணி பகிஷ்காரப் போராட்டம் ஆகிய வைகளில் கலந்து கொண்டார். முன்னாள் சபாநாயகர் சிவசண்முகம் தலைமையில் நடைபெற்ற கழுகுமலை ஆலயப் பிரவேசத்திலும் கலந்து கொண்டார். 1940-ல் இவரது கிராமத்தில் கூடிய விவசாய மா நாட்டில் பொதுக்காரிய தரிசியாக இருந்து மாநாட்டைச் சிறப்புற நடத்தினார். தேச விடுதலை இயக்கத்திலும் நாட்டில் நடந்த போராட்டங்களிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார், என்பதற் காக இவரது வீடு அன்னிய அரசால் சோதனையிடப் பெற்று கைது செய்யப் பெற்றார். இந்தியப் பாதுகாப்புச் சட்டம் படி 13.-12.-1940-ல் தண்டிக்கப்பெற்று மதுரை, வேலூர் சிறைகளில் 4 மாதம் தண்டனை அனுபவித்தார். ஹரிஜனத் தொண்டில் தீவிரமாக ஈடு பட்டிருந்தார். 1958-ல் ஹிஸீtஷீuநீலீணீதீவீறீவீtஹ் ஸிமீனீஷீஸ்ணீறீ-கிஷ்ணீக்ஷீபீ மிமி 1956 ஷி. வி. என்ற அரசாங்க விருது இவருக்கு அளிக்கப்பட்டது.
14.பேச்சிமுத்துப் பிள்ளை
ஸ்ரீவைகுண்டம் 1921-ல் முடித்தானேந்தலில் பிறந்தார். 1956-ல் காங்கிரஸ் தொண்டர்படை அமைத்து 1937 வரை காரியதரிசி யாகப் பணியாற்றினார். 1937-ல் நடைபெற்ற ஜில்லா போர்டு தேர்தலில் காங்கிரசுக்காக உழைத்தார். ஜஸ்டிஸ்கட்சியினரால் மிகவும் மோசமாகத் தாக்கப்பட்டார். 1942-ல் புதூரில் ஆசிரியர் வேலை பார்த்துக்கொண்டே புரட்சியில் தீவிரமாக ஈடுபட்டார். 19.-8-.1942 இரவு திருநெல்வேலி – தூத்துக்குடி ரஸ்தாவி லுள்ள தந்திக்கம்பிகளை அறுக்கும் பணியில் ஈடுபட்டு கைதாகி சொல்லொண்ணா கொடுமைக்கு ஆளானார். ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி, திருச்செந்தூர், கொக்கிரகுளம் சப்-ஜெயில்களிலும், திருச்சி மத்திய சிறையலுமாக 6 மாதங்கள் 13 நாள்கள் தண்டனை அனுபவித்தார். சிறையில் ஒழுங்கான முறையில் உணவு வழங்கப்படாததைக் கண்டித்து உண்ணாவிரதம் இருந்து போலீஸாரின் தடியடிக்குள்ளானார். திருச்சி சிறையில் காந்திஜி வரலாறு பற்றிய வில்லுப்பாட்டு நடத்தி வார்டர்களால் அவதியுற்றார்.
15. பழனிச்சாமி
–
கோவில்பட்டி தாலுகா நாகலாபுரத்தில் 1908 பிறந்தார். 1936-ல் வார்தாவில் நடை பெற்ற அகில இந்திய கிராம கதர்தொழில் சங்கத்திலும், அடிகளின் ஆசிரமத் திலும் 13 ஆண்டுகள் சேவை செய்துள்ளார். 1930-ல் உப்புச்சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டு திருச்சியிலும் பெல்லாரியிலும் ஒரு வருடம் கடுந்தண்டனை அனுபவித்தார். விடுதலையடைந்தபின் கதர் சேவையில் தீவிரமாக ஈடுபட்டார். 1932-ல் விருதுநகரில் ஜவுளிக்கடை மறியலில் கலந்து கொண்டு மதுரை, பெல்லாரி சிறைகளில் 6 மாதங்கள் தண்டனை அனுபவித்தார். பின்னர் திசையன்விளையில் உதவியாளராக அமர்ந்து மூன்றாண்டுகள் கதர் சேவை புரிந்தார். 1942 புரட்சியின் போது 3 மாதங்கள் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் அனுபவித்தார். விடுதலையடைந்தபின் 1943 முதல் 1948 வரை மீண்டும் கதர் சேவையிலேயே ஈடுபட்டார். 1957-ல் ஆரம்பிக்கப்பட்ட காந்தி சேனையில் 7 வருடங்கள் ஊழியராகப் பணியாற்றினார். கதர்சேவையோடு தீண்டாமை ஒழிப்பு பிரசாரமும் செய்து வந்தார்.
16.நடராஜன் பிள்ளை
இவரது தந்தை பெயர் சுவாமிநாத பிள்ளை இவர் 1909 ல் பிறந்தார். சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்ட காரணத்தினால் 6 மாதம் திருச்சி சிறையில் தண்டனை பெற்றார்.
17.நாகலிங்கம் செட்டியார்
கோவில்பட்டி நாகலாபுரத்தில் 1916 ல் பிறந்தார். 1942 ஆகஸ்டு புரட்சியின் போது கைது செய்யப் பெற்று கோவில்பட்டி சப்ஜெயிலில் 2 மாதம் ரிமாண்டில் இருந்தார். பின் 6 மாத தண்டனை அடைந்து அலிப்புரம் ஜெயிலில் அனுபவித்தார்.
18. நடராஜ ஆசாரி பாளையங்கோட்டையில் 1905 ல்பிறந்தார். 1925-ல் பிழைப்பிற்காக தூத்துக்குடிக்கு வந்து காங்கிரஸ் கட்சியில் அங்கத்தினராகச் சேர்ந்தார். 1930 உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்து கொண்டார். கைது செய்யப் பெற்று திருச்சி, கோயம்புத்தூர், பெல்லாரி சிறைகளில் ஒரு ஆண்டு காலம் தண்டனை அனுபவித்தார். 1941-ல் ஹார்வி மில்லில் வேலையில் சேர்ந்தார். 1955லிருந்து சேவா தளத் தொண்டராகப் பணியாற்றினார்.
19. மூக்கன் நாடார்
திருச்செந்தூர். 1917-ல் ஆறுமுகநேரி கீழ நாவலடிவிளையில் பிறந்தார். விடுதலை இயக்கத்தில் 1940-ல் சேர்ந்தார். 1942 ஆகஸ்டு புரட்சியில் கைதானார். அலிப்புரம் சிறையில் 5 மாதங்கள் தண்டனை அனுபவித்தார்.
20.மந்திரம்
1904-ல் தூத்துக்குடி பூபாலராயர் புரத்தில் பிறந்தார். 1922 முதல் காங்கிரஸில் அங்கத்தின ரானார். 1930-வேதாரண்யம் உப்புச் சத்தியாக்கிரகத்தில் ஈடு பட்டு போலீஸாரால் தடியடிபட்டார். அதையும் பொறுமையோடு பெற்றுக்கொண்டு மீண்டும் சத்தியாக்கிரகத்தைத் தொடர்ந்ததால் கைது செய்யப்பெற்று திருச்சி, பெல்லாரி, அலிப்புரம் சிறைகளில் ஒரு வருடம் கடுங்காவல் தண்டனை அனுபவித்தார். அப்பொழுது இவரது தகப்பனார் இறந்துவிட்டார். மன்னிப்புக் கேட்டால் விடுதலை செய்துவிடுகிறோம் என்று சிறையினர் கூறியதற்கு மறுத்து விட்டார். 1932-ல் கள்ளுக்கடை மறியலின்போது ஒரு மாதம் ரிமாண்டில் இருந்தார். 1941-ல் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். 1942-ல் ராணுவ தேசிய எழுச்சிப் பிரசாரம் செய்தார். நாடு சுதந்திரம் அடைந்தபின் தான் திருமணம் செய்துகொள்வது என்று தீர்மானித்து 1947-ல் சிவகாமி அம்மையை மணந்தார்.
21. கருப்பசாமி
தூத்துக்குடி – பக்கிள் புரத்தில் 1926 ல் பிறந்தார். இள வயதிலேயே அரசியலில் ஈடுபட்டார். படிக்கும் பொழுதே ஸ்ரீதத்தர் இளைஞர் சங்க காரியதரிசியாகப் பணியாற்றினார். மகாத்மா, நேரு போன்ற தலைவர்கள் கைது செய்யப்பட்டவுடன் மாண வர்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தினார். 1942 போராட் டத்தின் போது மிகவும் தீவிரமாக தன் நண்பர்களுடன் புரட்சியில் இறங்கினார். தடைகளை மீறி கூட்டங்கள் கூட்ட ஏற்பாடுகள் செய்தார். எங்கெங்கே கூட்டம் நடைபெறும் என்பதை அறிவிக்க ஒவ்வொரு நாள் இரவும் கண் விழித்து பிரசுரங்கள் எழுதி விநியோகித்து வந்தார். இதன் காரண மாக கைது செய்யப்பெற்று 3 மாதம் ரிமாண்டில் இருந்தார். பின்னர் தண்டிக்கப்பெற்று அலிப்பூர் சிறையில் 6 மாதங்கள் தண்டனை அனுபவித்தார்.
22. சு. பிரமநாயகம் பிள்ளை
1930-ல் தூத்துக்குடி திரேஸ்புரத்தில் பிறந்தார். தேசபக்தியில் ஈடுபாடு ஏற்பட்டதன் காரணமாக கதர் உடுத்தி காங்கிரஸில் அங்கத்தின ரானார். அரிஜன முன்னேற்றத்தில் ஈடுபட்டார். கதர் விற்பனை செய்து வந்தார். வண்ணார்பேட்டை வக்கீல் சோமசுந்தரம் பிள்ளை நடத்திய 36-வது காங்கிரஸில் பார்வையாளராகக் கலந்து கொண்டார். தூத்துக்குடி புதுக்கிராமத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் தொண்டனாகப் பணியாற்றினார். கோபால்சாமி நாயக்கர் மைதானத்தில் நடைபெற்ற மா நாட்டிலும் தொண்ட னாகிச் சேவை செய்தார். இந்நகருக்கு விஜயம் செய்த காந்திஜிக்கு கையால் நூற்ற கதர் நூல் மாலை அணிவித்து வெள்ளி டம்ளர் பரிசளித்து மகிழ்ந்தார். 1927-ல் காந்தியடிகள் காப்பி சாப்பிடுவது கெடுதி என்று கூறியதால் அப்பழக்கத்தை விட்டார். 1930-ல் ஜவுளிக்கடை, கள்ளுக்கடை மறியல் போராட்டங்களில் கலந்து கொண்டார். 1932-ல் 144 தடை உத்தரவை மீறி தேசியக் கொடிபிடித்து ஊர்வலமாக வந்து பொதுக்கூட்டம் போட்டுப் பேசியதால் கைது செய்யப்பெற்று, மதுரை, திருச்சி சிறைகளில் 6 மாதம் தண்டனை அனுபவித்தார்.
23. வெ. அருணாசலம்
இவர் 1919-ல் தூத்துக்குடியில் சண்முகபுரத்தில் பிறந்தார். இவரது தேசிய வாழ்க்கை 18 வயதில் ஆரம்பமானது. இவர் பிறந்த ஊர் ஜஸ்டிஸ் கட்சியின் கோட்டை. இங்கு லாலாலஜபதிராய் உடற்பயிற்சி கழகம் அமைத்து ஜஸ்டிஸ் கட்சிக் கோட்டையைத் தகர்த்தார். 1942 ஆகஸ்டுப் புரட்சியில் கலந்து கொண்டு கைதாகி அலிப்புரம் சிறையில் ஒரு ஆண்டு தண்டனை அனுபவித்தார். 19.4.19-42-ல் கிராமபிரசார சங்கத் தின் செயலாளராகப் பணியாற்றினார். 8.-11.-41-ல் தூத்துக்குடி சென் குப்தா வாலிபர் சங்கத்தின் நிர்வாகி மு. துரைப்பாண்டியனின் சகோதரியான பேச்சியம்மாள் என்ற சவுந்திரகனி அம்மாளை கதர் திருமணம் செய்து கொண்டார்.
24. வியாகுலம் பெர்னான்டோ
1906-ல் தூத்துக்குடியில் பிறந்தார். 1930-ல் நடைபெற்ற கள்ளுக்கடை மறியல், துணிக்கடை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடு பட்டவர். இதன் காரணமாகக் கைதுசெய்யப்பெற்று திருச்சி பெல்லாரி சிறைகளில் 6 மாதம் தண்டனை அனுபவித்தார். தேசப்பணி இயக்கங்களில் ஈடுபட்ட தால் பல தடவைகள் அடியும் மிதியும்பட்டுள்ளார்.
25.கோபாலன் செட்டியார்
1919-ல் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிலுள்ள சிங்கத்தாகுறிச்சி யில் பிறந்தார். 1935-ல் இளைஞர் காங்கிரஸில் சேர்ந்து காங்கிரஸ் தொண்டர் அணி அமைத்து மக்களிடம் போராட்ட உணர்வையும் எழுச்சியையும் தூண்டி விட்டார். கிராமங்கள் தோறும் சென்று பொதுக் கூட்டங்கள் நடத்தி வந்தார். 1937-ல் சத்தியமூர்த்தி தலைமையில் முடிவைத்தான் ஏந்தலில் நடை பெற்ற ஜில்லா அரசியல் மா நாட்டை முன்னின்று நடத்திவைத்த பெருமை இவருக்குண்டு. 1942 புரட்சியின் போது ஆசிரியர்
பேச்சிமுத்துப் பிள்ளையும் இவரும் 20.-8-.42 அன்று இரவு தூத்துக்குடி, பாளையங்கோட்டை செல்லும் தந்திக்கம்பங்களை வெட்டி வீழ்த்தவே போலீஸரால் கைது செய்யப்பெற்று தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் சப்-ஜெயில்களில் 5 மாதம் தண்டனை அனுபவித்தார். பின்னர் மீண்டும் அலிப்புரம் சிறையில் ஒரு வருடம் தண்டனை அனுபவித்தார். சிறையில் ஆங்கில அதிகாரிகளின் கொடுமைகளின் காராணமாக 3 நாள் உண்ணாவிரதம் இருந்தார்.
26.காந்தி செட்டியார்எனும் ம. காந்திமதிச்செட்டியார் கோவில்பட்டி.
இவர் 1913 ல் பிறந்தார். 1929 முதல் தேசியப்பணிகளில் ஈடுபட்டு வந்தார். வேதாரண்ய உப்புச் சத்தியாக்கிரகத்தின் போது சாத்தூர் வக்கீல் சுப்பிரமணிய நாயனாரால் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மண்ணெண்ணெய்க்கடை சீனிவாச ஐயங்கார் பொருளுதவி செய்தார். திருச்சி சென்று டாக்டர் ராஜன் ஆசிரமத்தில் தங்கி பின் தொண்டர்படையுடன் கலந்து வேதாரண்யம் செல்லும் வழியில் கைதானார். போலீஸார் இவரைச் சிறைவைக்காமல் திருச்சியில் கொண்டு வந்து விட்டுவிடவே, இவர் மீண்டும் வேதாரண்யம் சென்றார். ஆனால் வழியிலேயே தஞ்சையில் கைது செய்யப்பெற்று பெல்லாரி மத்திய சிறையில் 6 மாதம் தண்டனை அனுபவித்தார். 1931-ல் சோமயாஜுலுவின் தலைமை யில் கள்ளுக்கடை மறியல் போராட்டத்திலும், தூத்துக்குடி போராட்டத்திலும் கலந்து கொண்டு அடியும் மிதியும் பட்டுத் துன்புற்றார். ‘வெடிகுண்டு வைத்திருப்பதாய் வழக்குப் போடுவோம் என்று பயமுறுத்தி 2 நாள் சிறையில் வைத்து விடுதலை செய்யப்பட்டார். 1942-ல் கோவில்பட்டி சந்திவிநாயகர் கோவில் முன் கொடிக்கம்பம் நட்டிக் கொடி ஏற்றிய தற்காக திருச்சி மத்திய சிறை யில் 2 ஆண்டுகள் தண்டனை அனுபவித்தார்.
27.வியாகுலம் பெர்னான்டோ
1906-ல் தூத்துக்குடியில் பிறந்தார். மனைவி பெயர் அசந்தம்மா கோமஸ். சந்திரபோஸ் பர்னாந்து, பிச்சையா பர்னாந்து, ஜேம்ஸ் பர்னாந்து என்ற மூன்று ஆண்கள் உள்ளனர். 1930-ல் நடைபெற்ற கள்ளுக்கடை மறியல், துணிக்கடை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடு பட்டவர். இதன் காரணமாகக் கைதுசெய்யப்பெற்று திருச்சி பெல்லாரி சிறைகளில் 6 மாதம் தண்டனை அனுபவித்தார். 1936-ல் திருமணமானது. அதன் பின்ன ரும் 1947-வரை நாட்டில் நடைபெற்ற அனைத்துப் போராட்டங்களிலும் கலந்துகொண்டார். தேசப்பணி இயக்கங்களில் ஈடுபட்ட தால் பல தடவைகள் அடியும் மிதியும்பட்டுள்ளார். 1960-ல் மரணமடையும்வரை தம்மால் இயன்ற சமூகநல இயக்கங்களி லெல்லாம் ஈடுபட்டுவந்தார். இவருக்கு அரசு மாதம் ரூ 125/உதவித்தொகை அளித்துவந்தது. இவர் இறந்தபின் இவரது மனைவி இப்பணத்தைப்பெற்று குடும்பம் நடத்திவருகிறார்
28.நாகலிங்கம் செட்டியார்
நாகலாபுரத்தில் பிறந்தார்.
1942 ஆகஸ்டு புரட்சியின் போது கைது செய்யப் பெற்று கோவில்பட்டி சப்ஜெயிலில் 2 மாதம் சிமாண்டில் இருந்தார். பின் 6 மாத தண்டனை அடைந்து அலிப்புரம் ஜெயிலில் அனுபவித்தார்.


