தமிழகத்தில் புனித வெள்ளியின் புனிதம் காக்கும் வகையில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அகில இந்திய மீனவர் சங்கம் தேசிய தலைவர் அன்டன் கோம்ஸ், மாநில சிறுபாண்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ்-க்கு அனுப்பியுள் மனுவில் “தமிழகத்தில் தேசப்பிதா காந்தியடிகள், வள்ளலார் பிறந்தநாள் உட்பட பல்வேறு நாட்களில், நாட்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. புனித வெள்ளி என்பது உலக முழுவதுமுள்ள கிறிஸ்தவ மக்களால் துக்க நாளாக, ஒருசந்தி உபவாசத்துடன், சுத்த போஜனம் (மாமிசம் தவிர்ப்பு) கடைபிடித்து, முழு நாள் ஆராதனை புரியும் நாள்.
மது பழக்கத்திற்கு அடிமையாக்கப்பட்ட இளைஞர்களால், பாரம்பரிய புனித வெள்ளியின் புனிதம் கெடும் நிலை உருவாகியுள்ளது. இது அனைத்து சிறுபாண்மை கிறிஸ்தவர்களின், மௌனமான மன குமுறலாக உள்ளது. புனித வெள்ளியின் புனிதம் காக்கும் வகையில், சமரசமற்ற மதசார்பின்மைக்கான குரல்களின் முன் வரிசையில் உள்ள குரலுக்கு சொந்தக்காரரான உங்களுக்கு, அன்று ஒருநாள் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


