தூத்துக்குடியில் நாளை ஸ்மார்ட் சிட்டி பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் கனிமொழி எம்பி தலைமையில் நடைபெறுகிறது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகளை நாளை (01.04.2023) மதியம் 12 மணிக்கு வழங்குகிறார். அதனைத்தொடர்ந்து மதியம் 1.15 மணிக்கு காயல்பட்டினத்தில் பொது சேவை மையத்தை (பல்நோக்கு மண்டபம்) திறந்து வைக்கிறார்.
பின்னர், மாலை 4 மணிக்கு உடன்குடி ஊராட்சி ஒன்றியம் குலசேகரன்பட்டினம், மாலை 4.30 மணிக்கு சிறுநாடார் குடியிருப்பு, மாலை 5.30 மணிக்கு கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் சேரகுளம், மாலை 6 மணிக்கு செய்துங்கநல்லூர், மாலை 6.30 மணிக்கு விட்டிலாபுரம் ஆகிய பகுதிகளில் அங்கன்வாடி கட்டிடங்களை திறந்து வைக்கிறார்கள். அதனைத்தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் இரவு 7.30 மணிக்கு தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையில் நடைபெறுகிறது.


