சென்னை தரமணி ஸ்பாஸ்டிக் சொசைட்டி ஆப் தமிழ்நாடு ஆடிட்டோரியத்தில் வருகிற செப்டம்பர் 1 ந்தேதி மாலை 5மணிக்கு நெல்லை தினவிழா மற்றும் நெல்லை ரத்னா விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளது. சென்னை வாழ் நெல்லை மக்கள் நலச்சங்கம் சார்பில் நடைபெறும் இந்த விழாவிற்கு தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு தமிழ் ரத்னா விருது வழங்குகிறார். இதில் தலைமை விருந்தினர்களாக பீட்டர் அல்போன்ஸ், எம்.எல்.ஏக்கள் நயினார் நாகேந்திரன், இசக்கி சுப்பையா ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் சங்கர்மணி வரவேற்கிறார். அறிமுக உரையை சங்கத்தலைவர் வழக்கறிஞர் சைமன் ஜெயக்குமார் ஆற்றுகிறார். நெல்லை ரத்னா விருது எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு பெற்றுக்கொள்கிறார்.
எழுத்தாளர் காமராசு நெல்லை, தாமிரபரணி, மேற்குதொடர்ச்சி மலை, சித்தர்கள், களரி அடிமுறை , அறியப்படாத சுதந்திர போராட்ட தியாகிகள் என களப்பணி மூலம் 65 நூல்களை எழுதியுள்ளார். ஆதிச்சநல்லூரில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைய மதுரை உயர்நீதி மன்றம் மூலமாக வழக்கு தொடர்ந்து வெற்றி கண்டவர். இவருக்கு தமிழக அரசு தமிழச்செம்மல் விருது, தமிழக கலை பண்பாட்டுத்துறை சார்பில் இவர் நாடகத்தில் பணிபுரிந்த வகைக்கு கலை நன்மணி விருது, நாகர் கோயில் ராஜகோகிலா அறக்கட்டளையில் ராஜகோகிலா விருது, நியூஸ் 7 தொலைக்காட்சியின் தமிழ் ரத்னா சிறப்பு விருது, கலைஞர் டிவியின் சிறந்த எழுத்தாளர் விருது உள்பட பல விருது பெற்றுள்ளார். இவர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவரின் தலைமையில் இயங்கும் கலை இலக்கிய இசை சங்கத்தின் உறுப்பினராகவும் உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக வி.ஜி. சந்தோசம், டாக்டர் சுதா சேஷயன், இஸ்ரோ விஞ்ஞானி சு. முத்து, புலம் பெயர் தமிழர் நலவாரியம் மீரான், நியூஸ் 7 தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் சுப்பிரமணியன், நெல்லை அண்ணபூர்ணா உணவக குழுமம் விஜயசுப்பிரமணியன், மெர்க்குரி நெட்வொர்க் ஆண்டனி, ஊடகவியலாளர் ஆவுடையப்பன் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
டாக்டர் எம்.ஜி.ஆர்.பல்கலைகழக முன்னாள் துணை வேந்தர் மேஜர் ராஜா, சாகித்ய அகாடமி விருதாளர் வண்ணதாசன், துபாய் டெக்டான் குழுமம் லெட்சுமணன் சோமசுந்தரம், மும்பை பாலாஜி குழுமம் பேச்சிமுத்து ஆகியோரும் நெல்லை ரத்னா விருது பெறுகிறார்கள்.
தொடர்ந்து நெல்லை நட்சத்திரம் விருதுகள் வழங்கப்படுகிறது. இந்திய கூடைப்பந்து வீராங்கனை அனிதா பால்துரை, ஊடகவியாளர் சாட்டை துரை முருகன், சமூக செயல்பாட்டாளர் நிவேக், அயோத்தி பட இயக்குனர் மந்திர மூர்த்தி, ஆகஸ்ட் 15 இயக்குனர் பொன்குமார், பம்பர் பட இயக்குனர் செல்வக்குமார், அறமுடைத்த கொம்பு இயக்குனர் ஜாக்சன்ராஜ், இயக்குநர் தமயந்தி, வசனகர்த்தா ஜா.தீபா ஆகியோர் இந்த விருதுகளை பெற்றுக்கொள்கிறார்கள்.
கௌரவ தலைவர் டாக்டர் தி-ல்லை வள்ளல் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார். பொருளாளர் வேல்முருகன் சீனிபாண்டியன் நன்றி கூறுகிறார். நிகழச்சியை பேராசிரியர் கல்பனா சிவா தொகுத்து வழங்குகிறார்.


